விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார் விவகாரம்!

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார் விவகாரம்! பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்கும் மற்றொரு வீரர்.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து, வீரேந்தர் சிங்கும் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகள் துஷ்பிரயோக குற்றச்சாட்டு இந்தியு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் மீது பாலியல் புகார் கூறி போராட்டம் நடத்தியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடந்தது. இதில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.

இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அத்துடன் வீராங்கனை சாக்ஷி மாலிக், பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்க முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீருடன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவாக பேசிய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்காததால் மற்றொரு மல்யுத்த வீரரான வீரேந்தர் சிங்கும் தற்போது, அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதினை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், விவகாரம் குறித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!