அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த மகளிர் இந்திய அணி..

மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் மகளிர் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 219 ரன்களும், இந்திய அணி 406 ரன்களும் எடுத்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனைகள் போஎபே 18 ரன்களும்இ மூணே 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

எல்லிஸி பெர்ரி (Ellyse Perry) 45 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்நேஹ் ராணா ஓவரில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து அரைசதம் அடித்த டஹ்லியா மெக்ராத் 73 விளாசினார்.

பின்னர் வந்த கேப்டன் ஹீலி மற்றும் சதர்லேண்ட் நங்கூரம்போல் நின்று ஆடினர். 101 பந்துகளை எதிர்கொண்ட ஹீலி 32 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்பிரீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கார்ட்னர் (7), சதர்லேண்ட் 27 (102) ஆட்டமிழக்க, தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்திய அணியின் ஸ்நேஹ் ராணா (Sneh Rana) 4 விக்கெட்டுகளும், கெய்க்வாட் மற்றும் ஹர்மன்பிரீத் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் 75 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கினை எட்டியது.

ஸ்மிரிதி மந்தனா 61 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக டெஸ்டை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!