இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி

ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கியபோது 37 ரன்களில் இருந்த ஜெய்ஸ்வால், ஜோ ரூட் ஓவரில் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 99 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 55 ரன்களில் ஹார்ட்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ராஜத் படிதார் (0), ஜடேஜா (4) மற்றும் சர்பாராஸ் கான் (0) மூவரும் பஷீர் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

எனினும் துருவ் ஜுரெல் – கில் கூட்டணி வெற்றியை நிலைநாட்டியது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சுப்மன் கில் 52 ரன்களும், துருவ் ஜுரெல் 39 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியது.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!