இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்த இந்திய அணி! 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களும், இங்கிலாந்து 253 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 255 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கிராவ்லே நிலைத்து நின்று ஆடிய நிலையில், டக்கெட் 28 ரன்களிலும், ரெஹான் அகமது 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ஓலி போப் (23), ஜோ ரூட்டை (16) இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினார்.

இதற்கிடையில் அரைசதம் விளாசிய கிராவ்லே 73 ரன்னில் குல்தீப் ஓவரில்  lbw ஆனார். அதேபோல் ஜானி பேர்ஸ்டோவ் 26 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஸ்டோக்ஸ் 11 ரன்னில் ரன்அவுட் ஆக, ஃப்போக்ஸ் மற்றும் ஹார்ட்லே பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்த கூட்டணி 55 ரன்கள் எடுத்தது. ஆனால் பும்ரா இருவரையும் அவுட் செய்தார். ஃப்போக்ஸ் மற்றும் ஹார்ட்லே தலா 36 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் இங்கிலாந்து 292 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக, இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் முதல் போட்டியின் தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!