சூரியகுமார் தலைமையில் இந்திய டி20 அணி அறிவிப்பு! அவுஸ்திரேலிய தொடரில் இடம்பிடித்த தமிழக வீரர்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) இந்த அணிக்கு தலைமை தாங்குகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) துணைத் தலைவராக செயல்படுவார். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் துணைத் தலைவராக இருப்பார்.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு (Washington Sundar) இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோஹித், கோஹ்லி, புமரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி 23ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
இரண்டாவது போட்டி 26ஆம் திகதி திருவனந்தபுரத்திலும், 3வது போட்டி 28ஆம் திகதி கவுகத்தியிலும் நடக்க உள்ளன.
4வது போட்டி 1ஆம் திகதி ராய்புரிலும், கடைசி போட்டி 3ஆம் திகதி பெங்களூரிலும் நடக்கின்றன.
அணி விபரம்:
சூரியகுமார் யாதவ் (கேப்டன்)
ருதுராஜ் கெய்க்வாட்
இஷான் கிஷன்
ஜெய்ஸ்வால்
திலக் வர்மா
வாஷிங்டன் சுந்தர்
ஜிடேஷ் ஷர்மா (WK)
ரிங்கு சிங்
ஷிவம் தூபே
அக்சர் படேல்
ரவி பிஸ்னோய்
ஆவேஷ் கான்
முகேஷ் குமார்
பிரசித் கிருஷ்ணா
அர்ஷ்தீப் சிங்

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!

1 comment

நீண்டநாள் காதலியை கரம் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்! பிறந்தநாளில் இணைந்த பந்தம் - Namthesam Tami November 25, 2023 - 6:39 am
[…] மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக களம் […]
Add Comment