இரண்டே நாளில் முடிந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்!

Cricket - Second Test - South Africa v India - Newlands Cricket Ground, Cape Town, South Africa - January 4, 2024 India's Virat Kohli celebrates winning the match with teammates REUTERS/Esa Alexander

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது.

முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களும், இந்தியா 155 ரன்களும் எடுத்து ஆல்அவுட் ஆகின.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் எல்கர், ஜோர்சி ஆகியோரை முகேஷ் குமார் வெளியேற்றினார்.

அடுத்ததாக பும்ராவின் தாக்குதலில் தென் ஆப்பிரிக்க அணி நிலைகுலைந்தது. ஆனாலும் எய்டன் மார்க்கரம் தனியாளாக போராடினார்.

அவர் அதிரடியாக 103 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்தார். இது அவரது 6வது டெஸ்ட் சதம் ஆகும்.

மார்க்கரம் ஆட்டமிழக்க, பின்னரே ரபாடா மற்றும் இங்கிடியும் வெளியேற தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்திய அணியின் தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், பிரசித் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 28 ரன்கள் எடுத்தார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்த தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.

மேலும்இ ஆட்டநாயகன் விருதை சிராஜ் வென்றார். தொடர் நாயகன் விருதை பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகிய இருவரும் வென்றனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!