இந்தியாவுக்கு பயணித்த சரக்கு கப்பலை கடத்திய ஹவுதி அமைப்பினர்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர சண்டைகள் நடந்து வரும் சூழலில், இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தரும் ஹவுதி படையினர், இஸ்ரேலிய கப்பல்கள் அல்லது அவர்களின் கொடி பறக்கக்கூடிய கப்பல்கள் செங்கடல் வழியே சென்றால் கடத்தப்படும் என ஹவுதி படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் இஸ்ரேலை பழி வாங்கும் நோக்கில் கப்பலை கடத்தியதாக அவர்கள் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்குரிய கேலக்சி லீடர் என்ற பெயர் கொண்ட அந்த கப்பல், ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளது.
அதில் 22 பணியாளர்கள் வரை பணயக் கைதிகளாகக் கைப்பற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த கப்பல் இஸ்ரேலிய தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான பிரிட்டிஷ் நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும், தற்போது ஜப்பானிய நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) யூத அரசை சேர்ந்த குடிமக்கள் யாரும் கப்பலில் பயணிக்கவில்லை என தெரிவித்துள்ளது மற்றும் இது மிகவும் கடுமையாக சம்பவம் என்றும் குறிப்பிடுள்ளது.
மேலும், இது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றே கடத்த இருந்ததாகவும், அதற்கு ஹவுதியர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனுப்பியதாக சந்தேகிக்கப்பட்டது தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!