2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமுன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆட்சியாளர் நிறைவேற்றப்போவதில்லை – சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆட்சியாளர் நிறைவேற்றப்போவதில்லை . 2023ஆம் ஆண்டிலும் இதுதான் நடந்தது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கும் இதுதான் நடக்கும் இதே முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஆண்டு மற்றும் 2023 அம்மா ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.  குறிப்பிட்ட முன்மொழிவுகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை.வழமையான அறிக்கையாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது.
 எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் சம்பிரதாயபூர்வமான வரவு செலவுத் திட்டமாகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து இறந்த காலத்தை அடியொற்றியதாக சகல முன்மொழிவுகளும் காணப்படுகின்றன.
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைவிட பல முன்மொழிவுகள் கடந்த கால வரவு செலவுத்திட்டங்களிலும் முன்வைக்கப்பட்டன.ஆனால் எவையும் செயற்படுத்தப்படவில்லை.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள். ஆனால் எதுவுமே ஆட்சியாளர்களினால் நிறைவேற்றப்படாது என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!