கார் மீது விமானத்தை மோதிய ஜேர்மன் விமானி! இருவர் பலியான சோகம்

பெல்ஜியம் நாட்டில் இலகுரக விமானம் ஒன்று கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், ஜேர்மனி உட்பட இருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள Aerodrome அருகே நபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு புகைபிடிக்க சென்றுள்ளார்.

அச்சமயம் சிறிய ரக விமானம் (Light Aircraft) ஒன்று கார் மீது மோதியுள்ளது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எறிந்தது.

இந்த விபத்தில் விமானத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காருக்கு சொந்தக்காரர் புகைபிடிக்க நகர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

இந்த விபத்து குறித்து பொலிஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது விமானத்தை தரையிறக்க முயன்றபோது காற்றின் வேகத்தால் அது தோல்வியடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது.

மேலும், உயிரிழந்த விமானி ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பயணியின் குடியுரிமை குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர்கள் கூறியதுடன், விமான விபத்து தோல்வியுற்ற தரையிறக்கம் என்று தெரிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!