காசா – இஸ்ரேல் போர் ஓயாது: இஸ்ரேலிய இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்..

காசாவில் ஹமாஸ் தரப்பினருடனான போர் ‘இன்னும் பல மாதங்களுக்கு” தொடரும் என இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி தகவல் வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான போருக்கு தீர்வுகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து போர் முடிவடையும் நிலையில் இல்லை என முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் மத்திய காசா வரையில் தங்களது தரைவழி தாக்குதல் நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்படுவதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சுமார் 100க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 11 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் 20,915 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!