காட்டுத்தீயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்வு

சிலியில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள வினாடெல்மார் மலைப்பகுதியில் சமீபத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது.

இது மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவஇ சுமார் 20இ000 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதில் வனவிலங்குகள் உயிரிழந்துடன் 3000 வீடுகள் எரிந்து சேதமாகின.

தீயணைப்பு படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டுத் தீயினால் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தடவியல் நிபுணர்கள், காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணுப் பொருட்களின் மாதிரிகளை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் அந்நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக், தீயை அணைக்க போராடி வரும் மீட்புப் படையினருக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இனிவரும் நாட்களில் காட்டுத்தீ காரணமாக வெப்பநிலை 104 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!