டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்

நியூசிலாந்தின் டிம் சௌதீ டி20யில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஈடன் கார்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின் டிம் சௌதீ (Tim Southee) 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், டி20யில் அவரது மொத்த விக்கெட் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்தது.

இதன்மூலம் சௌதீ டி20யில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அவருக்கு அடுத்தபடியாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டி20 அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:

1. டிம் சௌதீ (நியூசிலாந்து) – 151 விக்கெட்டுகள்

2. ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) – 140 விக்கெட்டுகள்

3. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) – 130 விக்கெட்டுகள்

4. இஷ் சோதி (நியூசிலாந்து) – 127 விக்கெட்டுகள்

5. லசித் மலிங்கா (இலங்கை) – 107 விக்கெட்டுகள்

6. அடில் ரஷீத் (இங்கிலாந்து) – 107 விக்கெட்டுகள்

7. முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்) – 105 விக்கெட்டுகள்

8. மிட்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து) – 105 விக்கெட்டுகள்

9. ஷதாப் கான் (பாகிஸ்தான்) – 104 விக்கெட்டுகள்

10. மார்க் அடைர் (அயர்லாந்து) – 102 விக்கெட்டுகள்

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!