தடையுன்றி பரீட்சை நடைபெறும்..

உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உயர்தரப் பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களில் உயர்தரத்துக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதை உறுதிப்படுத்த பேரிடர் முகாமைத்துவம், ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சனையும் இல்லாமல் பரீட்சை எழுதவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”. என தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!