அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் பாஜகவின் வேட்பாளர்கள்! விளாசிய கார்கே

அரசு துறைகள் பாஜகவின் வேட்பாளர்களாக செயல்படுகின்றன என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
நவம்பர் 17ம் திகதி மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குவாலியரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
“பாஜக சார்பில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை களத்தில் உள்ளன. ஒரு தொகுதிக்கு காங்கிரஸுக்கு ஒரு வேட்பாளர். ஆனால் பாஜகவிற்கோ நான்கு வேட்பாளர்கள் உள்ளனர்.
கண்ணுக்கு தெரிந்த கட்சியின் வேட்பாளர் ஒருவர், மீதம் கண்ணுக்கு தெரியாத வேட்பாளர்களாக வருமான வரித்துறை, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை செயல்படுகின்றன” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், அமலாக்கத்துறை பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரம் செய்து வருகிறது. சி.பி.ஐ., ஐடி ஆகியன எதிர்கட்சி வேட்பாளர்களை பலவீனப்படுத்தி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

“இதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்” – தமிழக முதல்வர்!