மக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்!

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

பொதுமக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆனது.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதனால், புயல், வெள்ள பாதிப்பு சேதங்களை சரி செய்ய ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு அரசு ரூ.37,000 கோடி கேட்டிருந்தது. ஆனால், இதுவரை ஒன்றிய அரசு தேவையான நிதி தரவில்லை என்பதால் ஒன்றிய அரசை கண்டித்து இன்று திமுகவினர் நூதன போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அதன்படி, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிதி ZERO’ என்ற எழுத்து கொண்ட கருப்பு பையில் பொது மக்களுக்கு அல்வா வழங்கி வருகின்றனர்.

இது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!