தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசன் நியமனம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பான முக்கியபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருவதுடன் இன்று பிற்பகல் நடைபெற உள்ள பொதுச் சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.