தமிழர்கள் கண்ணீர் விடுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு தலைவனின் மரணம் முழு தமிழகத்தையும் கதற வைத்துள்ளது..

தமிழக அரசியலில் உலாவரும் ஒரு அரசியல்வாதியாகவும் திரையுலகில் சிவந்த கண்களுடன் தனது ஈடு இணையில்லா ரசிகர் பட்டாலத்தை உறுவாக்கிய பெருமை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்.

இந்தியாவில் மதுரை – திருமங்கலம் எனும் ஊரில் 1952 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி இவர் பிறந்தார்.

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த்
சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது.

அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை சீன் பை சீனாகத் தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு கீரைத்துரையில் இருக்கும் தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.

இந்நிலையில் தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்தார்.

பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான ஹஇனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.

ஹசட்டம் ஒரு இருட்டறை’, ஹதூரத்து இடிமுழக்கம்’, ஹஅம்மன்கோவில் கிழக்காலே’, ஹஉழவன் மகன்’, ஹசிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து இந்திய திரையுலகில் அனைவராலும் ரசிக்கப்பட்ட கதாநாயகனாக வலம்வந்தார்.

கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

மேலும் 2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து ஹநீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.

மக்கள் பற்று கொண்ட இவர் 1965-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது சிறு வயதிலேயே விஜயகாந்த் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல, 1984-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, மனித உரிமை மீறல் நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார்.

பின்இ 1986-ம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989-களில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, ஹஹஈழத்தமிழர்கள் கண்ணீர் விடும்போது என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டைத் தவிர்த்தார்.

இதனடிப்படையில் 2005 அன்று மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் தனது புதிய கட்சியை ஆரம்பித்தார்.

பின்னர் 2011ஆம ஆண்டில் தேர்தலில் அ.தி.முகவுடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இவர் பதவி வகித்த காலத்தில், வெளிநாடுகளில் நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தி சங்க கடன்களை அடைத்தார்.

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், இவரது கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.

மேலும் 2011ம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த், 2016 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், டிபாஸிட்டையும் பறிகொடுத்தார். தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அரசியலில் பங்கேற்று தனது மக்களுக்காக அயராது பாடுபட்ட ஒரு மாமனிதராகா தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மை காலமாக விஜயகாந்தின் உடல்நில மோசமாக காணாப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் வெளியாகி தமிழக மக்களையும் திரையுலகத்தையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!