இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான் (71).

முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் ஆவார்.

பரிசுப்பொருட்கள் பெற்ற இம்ரான் கான் அவற்றை விற்ற பணத்தில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மாதம் இம்ரான் கான் ஜாமீன் பெற்றார்.

மேலும், அரசு ரகசியங்களை கசியவிட்ட மற்றொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை இந்த தண்டனையால் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!