நாட்டின் கடன் அதிகரித்துள்ளது! ரணில் விக்கிரமசிங்க மீது சபா‌.குகதாஸ் குற்றச்சாட்டு

அதிபர் ரணில் விக்ரமசிங்க எல்லையின்றி தமிழர்களின் விருப்பங்களை, உரிமைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளதாகவும், அவர் சிங்களர்களுக்கான தலைவராக தன்னை முன்னிருத்த முயல்கிறார் எனவும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பார் என அவரை சூழ்ந்து உள்ளவர்கள் கூறினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது‌.
தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவும், அதற்கான தீர்வுகளை பலவீனப் படுத்துவதற்காகவுமே அதிபரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அமைந்து வருகின்றது.
ரணிலின் இந்த எதேச்சதிகார போக்கை மட்டுப்படுத்தவும், தமிழர்கள் உரிமைகளுக்காக வலிமையான குரல் எழுப்பவும் ஆளுமை மிகுந்த துணிச்சலான தலைமை தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடயம்.
அதன்பொருட்டே தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டிக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்று சபா.குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!