மலேசியாவில், கேக் அல்லது வேறு எந்த பேக்கரி பொருட்களிலும் முஸ்லிம் அல்லாத பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை எழுத கூடாது என விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவில், கேக் போன்ற பேக்கரி பொருட்களில் இஸ்லாம் அல்லாத பண்டிகைகளுக்கு வாழ்த்து எழுத தடை விதிக்கப்பட்டிருந்தது.
பேக்கரிகள் இந்த விதியை மீறினால், அவர்களின் ஹலால் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக மலேசியாவில், கேக் அல்லது வேறு எந்த பேக்கரி பொருட்களிலும் முஸ்லிம் அல்லாத பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை எழுத முடியாது. பேக்கரிகள் தங்கள் கடைகளில் கூட இதுபோன்ற கேக்குகளை காட்சிக்கு வைக்க முடியாது.
இந்நிலையில் மலேசியா இஸ்லாத்தில் ‘ஹராம்’ இல்லை என்று கூறுவதால், இஸ்லாம் அல்லாத பண்டிகைகளின் போது மக்கள் கேக்கில் வாழ்த்துக்களை எழுதலாம்.
எனவே மலேசியாவில் ஹலால் சான்றிதழைக் கொண்ட பேக்கரிகள் இஸ்லாம் அல்லாத பண்டிகைகளுக்கான வாழ்த்துக்களை கேக் அல்லது பேக்கரி பொருட்களில் எழுதி விற்க முடியாது என 2020ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.