கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம்

கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேறிய உபரிநீரில் கார் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 3,328 கன அடியாக உயர்ந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 8 மணிக்கு ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
அதற்கு முன்பாக கரையோரம் உள்ள பல பகுதிகளின் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முகமது ரஃபிக் என்பவர் தனது மனைவி மற்றும் 10 வயது குழந்தையுடன் காரில் சென்றபோது உபரி நீரில் காருடன் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனை கவனித்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிஸார் அங்கு விரைந்ததைத் தொடர்ந்து, ரஃபிக் அவரது குடும்பத்தினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!