ஒரே ஆண்டில் 101 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்த கேப்டன்!

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது வசீம் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.

முதலில் ஆடிய அரபு அணியில் கேப்டன் முகமது வசீம் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.

அவர் அடித்த சிக்ஸர்கள் மூலம் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

ரோகித் 80 சிக்ஸர்கள் விளாசிய நிலையில், வசீம் 101 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இதற்கிடையில் ஆர்யன் லக்ரா ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 166 ஓட்டங்கள் குவித்தது.

கியாஸ் அகமது, அஸ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளும், பாசல்ஹக் மற்றும் நபி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 155 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகி 11 ரன் வித்தியாத்தில் தோல்வியுற்றது.

அதிகபட்சமாக முகமது நபி 27 பந்துகளில் 47 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) எடுத்தார்.
அலி நசீர், முகமது ஜவாதுல்லா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!