கிரிக்கெட் முடிந்து தண்ணீர் குடித்த சிறுவன் மரணம்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுவன், விளையாடிவிட்டு வந்ததும் தண்ணீர் குடித்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டம் ஹஸன்பூர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் பிரின்ஸ் சைனி (17).

இவர், பள்ளி விடுமுறையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார்.

அங்கு கிரிக்கெட் விளையாடி முடித்ததும் சைனி குளிர்ந்த தண்ணீரை பருகியுள்ளார்.

அதன் பின்னர் அவர் சட்டென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு சைனியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை அறிந்த பெற்றோர் மருத்துவர்களிடம் வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என கேட்டதற்கு, சிறுவன் விளையாடிவிட்டு வந்த உடனே குளிர்ந்த நீரைப் பருகியதால் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும்.

இது தான் காரணம் என சிறுவனை சோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அச்சிறுவனின் நண்பர்களும் விளையாடி முடித்த உடனே வீட்டிற்கு வந்து தண்ணீர் பருகினான். பின்னர் உடனே மயங்கி விழுந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!