பாராளுமன்ற தேர்தலில் வென்று MP ஆன வங்கதேச கேப்டன்!

வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று MP ஆகியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன்.

இவர் அரசியலில் களமிறங்கிய நிலையில், மகுரா மேற்கு நகரின் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில் போட்டியிட்டார்.

அதில் அவர் 1,85,388 வாக்குகள் பெற்றார். இதன்மூலம், 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று MP ஆனார்.

ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுவெளியில் ஷாகிப், ரசிகர் ஒருவரை பகிரங்கமாக அறைந்தார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்னர் டாக்கா பிரீமியர் லீக்கின்போது, நடுவர்களிடம் ஷாகிப் கோபத்தை காட்டியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!