30 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பை மீண்டும் உரிமையாளரிடம்

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்ணொருவரின் பை 30 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட நிலையில் தற்போது கிடைக்கப்பட்டுள்ளது.

குறித்த கைப்பை உரிமையாளரிடம் சிறுமி ஒருவரே கொண்டு சென்று கொடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது கரை ஒதுங்கிய பை ஒன்றை கண்டுபிடித்த சிறுமி, அதில் பேனா, சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், சாவி, மாத்திரைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதை பார்த்துள்ளார்.

மேலும் அந்த கைப்பையில் 1993ம் வருடம் குறிப்பிடப்பட்ட சில கிரெடிட் கார்டுகளும் இருந்துள்ளது.

குறித்த பையின் மேலே உள்ள அடையாளங்கள் மற்றும் அதில் இருந்த சில பொருட்களை வைத்து சமூக ஊடகங்களில் கைப்பையின் உரிமையாளரை தேடும் பணியில் 11 வயது மெய்சி கூட்ஸ் இறங்கியுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!