தீப்பிடித்து எரிந்தபடியே பறந்த அமெரிக்க சரக்கு விமானம்!

அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றியபடி பறந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Atlas Air Boeing நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, சான் ஜுவான் நகருக்கு செல்ல மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.

ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சரக்கு விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்தது.

எனினும் விமானி துரிதமாக செயல்பட்டு மியாமி விமான நிலையத்திற்கே திருப்பியுள்ளார். அங்கு ஏற்கனவே பாதுகாப்பு குழுவினர் தயாராக இருந்தனர்.

விமானம் தரையிறங்கியதும் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் விமானம் தீப்பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!