விஜய் கட்சிக்கு ஆதரவாக இறங்கிய நடிகை!

நடிகர் விஜய்க்கு ஒரு முறை வாய்ப்பு கொடுக்கலாம் என நடிகை வாணிபோஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

‘தமிழ் வெற்றி கழகம்’ என்று விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த உடன், அவர் கட்சியில் யார் எல்லாம் இணைவார்கள், அவருக்கு ஆதரவு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

குறிப்பாக தமிழ் திரையுலகில் விஜய்க்கு ஆதரவு எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வியும் உள்ளது.

இந்நிலையில், நடிகை வாணிபோஜனிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “விஜய் அரசியலுக்கு வரலாம் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் யார் வேண்டுமாலும் அரசியலுக்கு வரலாம். எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருந்தது” என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வாணிபோஜன், நடிகர் விஜய்க்குதான் தனது ஆதரவு என்பதை மறைமுகமாக கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!