தன் மனைவியையே 20 ஆண்டுக்கு பின் மீண்டும் திருமணம் செய்த 58 வயது நடிகர்..

பிரபல இந்தி நடிகர் ரோனி ராய் தனது மனைவியைஇ 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திருமணம் செய்துள்ளார்.

தமிழில் ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் ரோனித் ராய்.

58 வயதாகும் இவர் இந்தி திரையுலகில் பிரபல வில்லன் நடிகரை வலம் வருகிறார். இவருக்கும், ஜோன்னா நீலம் என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ரோனி ராய் – ஜோன்னா நீலம் தம்பதி மீண்டும் திருமணம் செய்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கோவாவில் உள்ள கோயிலில் 20 ஆண்டுகள் கழித்தும் இரண்டாவது முறையாக இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது.

தங்கள் பிள்ளைகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி முத்தங்களை பரிமாறிக் கொண்டது.

இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், பலரும் புதுமணத் தம்பதியாக அவர்களை நினைத்து தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!