‘குட் பேட் அக்லி’ படத்தின் 2வது லுக் வெளியானது!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி‘ என்று பெயரிடப்பட்டுள்ளது

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.’குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த சூழலில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் புதிய அப்டேட் நேற்று (27) மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இதன்படி நேற்று (27) மாலை அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!