விஜயின் இலங்கை வருகை

இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 – GOAT திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளன.

ஏற்கனவே படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை வந்து, ‘லொக்கேசன்’ பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நான்காம் திகதி முதல் படப்பிடிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இலங்கையின் பல்வேறு இடங்களில் குறுகிய காலத்துக்குள் இந்த படப்பிடிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

படப்பிடிப்பு இடம்பெறவுள்ள இடங்களில் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதைப் போன்று, நடிகர் விஜயின் இலங்கை வருகையும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜய் இலங்கை வந்துவிட்டாரா? இல்லையா என்பது குறித்த விபரங்கள் கூட இன்னும் வெளியாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்த்கக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!