இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா! வெளியான தகவல்

Bloomberg வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த 2 வருடங்களுக்குள் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழிற்சாலைகளை அமைக்கபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்திய அரசுக்கும், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கலாம்.
டெஸ்லா நிறுவனம், அடுத்த வருடம் முதல் இந்தியாவில் மின் வாகனங்களை (Electric Vehicles) இறக்குமதி செய்ய ஆயத்தம் ஆகி வருகிறது.
இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் மின் வாகனத்தின் மீது ஆர்வம் காட்டுவது டெஸ்லாவிற்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக 2 பில்லியன் டொலர்களை டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்யும் என்றும், 15 பில்லியன் டொலர் மதிப்புள்ள வாகன உதிரிபாகங்களை இந்திய நிறுவனங்களிடம் வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகளுக்கு உகந்த மாநிலங்களாக தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் விளங்குகின்றன.
மேலும் டெஸ்லா தன் உற்பத்தி செலவை குறைக்கும் விதமாக இந்தியாவிலேயே சில பேட்டரிகளை தயாரிக்கவும் பரிசீலனை செய்துவருவதாக Bloomberg கூறியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் 2024 ஜனவரியில், குஜராத்தில் நடக்கவுள்ள Vibrant Gujarat Global மாநாட்டில் எலான் மஸ்க் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ரூ.80,000 கோடியுடன் களமிறங்கும் அதானி குழுமம்!

ஆனந்த் அம்பானியின் மிரளவைக்கும் வாட்ச் கலெக்சன்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பிசோஸ் மீண்டும் முதலிடம்