பேருந்து – லொறி மோதலால் பயங்கர விபத்து! 19 பேர் பலி, 22 பேர் காயம்

மெக்சிகோ நாட்டில் இரண்டு அடுக்கு பேருந்தும், லொறி ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் Jalisco மாகாணத்தில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் பயணித்தது.

அந்த பேருந்து Sinaloa மாகாணத்தின் Los Mochis நகரினை நோக்கி பயணித்தது.

வடமேற்கு பகுதியில் பேருந்து செல்லும்போது எதிரே வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த பயங்கர விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் தெரிய வந்துள்ளது.

மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். மேலும், அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

மெக்சிகோ நாட்டில் அதிவிரைவாக செல்லுதல், வாகனங்களின் தரமற்ற நிலை அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவு போன்ற காரணங்களால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

கடந்த ஆண்டு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 29 பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!