ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்கள் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.

இந்த நேர்காணல்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேர்காணல்கள் குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிசம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற போட்டி பரீட்சை முடிவுகளின்படி ஆங்கிலப் பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்காணல் இடம்பெறவுள்ளது.

அதன்படி, மே 10, 11, 13 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நேர்காணலுக்கான தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்பு கடிதம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!