+2 தேர்வு முடிவுகள்! அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி!

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் மிக சிறப்பாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வு வரை நடைபெற்றது.

மொத்தம் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கியது. 83 மையங்களில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணிகள், ஏப்ரல் 13ஆம் தேதி நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. இன்று மே 6ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், லோக்சபா தேர்தல் காரணமாகத் தேர்வு முடிவுகள் தாமதமாகலாம் எனத் தகவல் பரவியது. இருப்பினும், திட்டமிட்டபடி மே 6இல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது.

அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியானது. dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய தளங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்து செக் செய்து கொள்ளலாம். மேலும், EMIS இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

இந்தாண்டு தமிழ்நாட்டில் +2 தேர்வு எழுதியவர்களில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்ச்சி விகிதம் 94.56% ஆக இருக்கிறது. இந்த தேர்வில் அரசுப் பள்ளிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி விகிதத்தையே கொடுத்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 7532 மேல்நிலை பள்ளிகள் இருக்கும் நிலையில், 2478 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!