தமிழக அரசு வெள்ளநிவாரண நிதி அறிவிப்பு! குடும்பத்திற்கு தலா 6,000..ரொக்கமாக கொடுப்பதன் காரணம்..

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழக மாவட்டங்களில் மிக அதிக கனமழையை பெய்துவிட்டு சென்றது.
இதில் சென்னை நகரமானது மிகவும் பாதிக்கப்பட்டது.
முதலமைச்சர் உட்பட பலர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக சென்னையின் பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இன்னும் சில பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான தேவை இருக்கிறது.
இதனை தொடர்ந்து மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரணம் அளிக்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை என்பதாலும் பல இடங்களில் ஏடிஎம் வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்ததாலும் நிவாரணப் பணத்தை ரொக்கமாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் எந்தெந்த பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் தரப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் உதயசந்திரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5,00,000 ரூபாய், குடிசைகள் சேதமடைந்தவர்களுக்கு 8,000, நெற்பயிர்களை இழந்தவர்களுக்கு ஹெக்டேருக்கு 17,000, பசுக்களை இழந்தவர்களுக்கு 37,500 நிவாரணம் அளிக்கப்பட உள்ளது.
ஆடுகளை இழந்தவர்களுக்கு 4,000, முழுவதும் சேதமடைந்த இயந்திர படகுகளுக்கு 7,50,000, கட்டுமரங்களுக்கு 50,000, வல்லம் வகை படகுகளுக்கு 1,00,000, சேதமடைந்த வலைகளுக்கு 15,000 ரூபாய் வரையிலும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!