சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நாளை..

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாளை தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் இரண்டாவது தவணை நிதியினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக கடந்த வாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

மறுபுறம் உலக வங்கியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு இம்மாதத்தில் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!