துறைமுகத்தில் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்..

துறைமுகத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (28) தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் சம்பள அதிகரிப்பு கோரியதன் அடிப்படையில் இன்று அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு துறைமுக அதிகார சபையினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக, தமது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திரு.நிரோஷன் கோரகன தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!