வாக்களிப்பதை வீடியோ எடுத்த 4 பேர் இடைநீக்கம்! தொடங்கிய மறுவாக்குப்பதிவு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அட்டெர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிஷூபுரா கிராமத்தில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் 230 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் 116 தொகுதிகளை வெல்லும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். இதற்கு ஒரே கட்டமாக கடந்த 17ம் திகதி தேர்தல் நடந்தது.
அமைதியான முறையில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 71.16% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அட்டெர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிஷூபுரா கிராமத்தின் வாக்குச்சாவடி 71ல் எண் 3ல் வாக்களிப்பதை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, ரகசியத்தை மீறியதற்காக வாக்குப்பதிவு குழுவினை சேர்ந்த 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சஞ்சீவ் ஶ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இதனால் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை கிஷூபுரா கிராமத்தின் வாக்குச்சாவடி 71, சாவடி எண் 3ல் மீண்டும் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
இரண்டாவது முறையாக வாக்குச்செலுத்த வரும் தகுதியுடைய மக்களுக்கு, நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டு அவர்கள் வாக்கினை பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!