டிசம்பர் 15 வரை நிறுத்தம்: இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

நாட்டில் வங்கிகளில் கடனை செலுத்த முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு சற்று நிம்மதி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகளில் கடனை வாங்கிய மக்களில், சிலர் அந்த கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால்,வங்கிகள் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த விஷயத்தில் சட்ட திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், வரும் டிசம்பர் 15ம் தேதி வரை கடனுக்காக வங்கிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்வதை இடைநிறுத்தம் செய்யம் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக, சிறு மற்றும் நடுத்தர குடும்பத்தினர் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்து முடியாமல் சிக்கலில் உள்ளனர். அதை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், வங்கி அமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடன்களை செலுத்துவதற்கு சில கால அவகாசம் வழங்குவது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்பதை கண்டறிந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!