திடீர் ஓய்வை அறிவித்த சுனில் நரைன்…

மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நரைன் 122 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார், இதில் 6 டெஸ்ட், 65 ஒருநாள் போட்டிகள் மற்றும் 51 T20 போட்டிகள் அடங்கும்.
ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்
 “நான் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி 4 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
இருந்தும் இன்று ஓய்வை அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என் கனவை நனவாக்கிய சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. என் குடும்பத்திற்கு நன்றி. பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மற்றும் சக வீரர்களுக்கு நன்றி என  நரைன் கூறியுள்ளார்.
எனினும், வணிக ரீதியான போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!