வெயிலால் முகம் கருப்பாயிடுச்சா? அப்போ இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!

தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலில் அதிகம் சுற்றினால், சரும நிறம் மாறி கருமையாகிவிடும். அதோடு, காலநிலை மிகவும் சூடாக இருப்பதால் வியர்வை அதிகம் சுரந்து, சருமத் துளைகளில் அழுக்குகளும், இறந்த செல்களும் தேங்கி அடைப்புக்களை ஏற்படுத்தி, முகப்பரு பிரச்சனையையும் அதிகம் உண்டாக்கும்.

நீங்கள் இப்படி முகப்பரு பிரச்சனையையும், முகக் கருமை பிரச்சனையையும் சந்திக்கிறீர்களா? கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாலே கருப்பாக இருக்கிறீர்களா? இப்படி கருமையான முகத்தை வெள்ளையாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள நினைக்கிறீர்களா? அதுவும் இயற்கை பொருட்களைக் கொண்டே எளிய வழியில் சரும நிறத்தை அதிகரிக்க நினைக்கிறீர்களா?

அப்படியானால் காபித் தூள் பெரிதும் உதவி புரியும். அதுவும் அந்த காபித் தூளைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும் போது சரும கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக ஜொலிக்கும். இப்போது சரும கருமையைப் போக்கி வெள்ளையாக்க உதவும் காபி ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

காபி மற்றும் தேன் ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

காபி மற்றும் பால் ஃபேஸ் பேக்

முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.

காபி, மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு கைகளை நீரில் கழுவி, முகத்தை மென்மையாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டு வந்தால், முகம் வெள்ளையாக இருக்கும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!