கழுத்து வலியால் அவதியா? இவற்றை செய்தால் போதும்..

கழுத்து வலிக்கு சிறந்த நிவாரணியாக ஜாதிக்காய் உள்ளதாக மருத்துவம் கூறுகிறது.
சமீப காலமாக மக்கள் அனைவரும் அதிக கழுத்து வலியால் துன்புறுகின்றனர்.
அதற்கு காரணம் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கும் தான்.
குறிப்பாக ஐடி ஊழியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கழுத்து வலி, கழுத்து பிடிப்பு ஏற்பட்டுவிடுவது இயல்பான ஒன்றுதான்.
கழுத்து பகுதி என்றாலும், முதுகுப்பகுதியின் மேல் பகுதியில், சதைப்பிடிப்புகள் தோன்றிவிடும்.
அதேபோல, தலையில் அல்லது கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டிருந்தாலும் கழுத்து வலி ஏற்படலாம்.
மேலும், நீண்ட நேரம் குனிந்திருந்தாலும் வலி ஏற்படலாம்.. வயது காரணமாக ஏற்படும் எலும்புத் தேய்மானத்தினாலும், கழுத்து வலி ஏற்படலாம்.
இப்படி வலி ஏற்பட்டால், சில சமயம் மூச்சு விட முடியாமல் சிரமம் வந்துவிடும். சில சமயம் எதையும் சாப்பிடக்கூட முடியாது.
இதற்கு பல முக்கியமான காரணங்கள்களுள் ஒன்று உடற்பயிற்சி.
உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்று, ஆகயால்,அனைவரும் தினமும் உடற்பயிற்சி தியானம், யோகா போன்றவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும்.
மேலும் சுடு தண்ணீரில் ஒத்தடம் தருவது ஐஸ் கட்டியில் ஒத்தடம் தருவது போன்றவை தினமும் செய்யலாம்.
அதேபோல கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டால், இதற்கு ஜாதிக்காய் உதவுகிறது.
ஜாதிக்காயை உடைத்து சிறிதளவு பாலுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இதை கொதிக்க வைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் மெதுவாக தடவி பற்றுப்போட்டால் சுளுக்கு சரியாகிவிடும். இப்படி 3 நாட்கள் செய்து வர சுளுக்கு சரியாகிவிடும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!