திடீரென தக்காளியின் விலையில் மாற்றம்

நாட்டில் அண்மைக்காலங்களாக மரக்கறிகளின் விலைகள் உச்சம் தொட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ கரட் 800 ரூபாவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒரு கிலோ கரட் 800 ரூபாய் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர்கள் சேதமடைந்திருந்தன.

எனவே, பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே சந்தைக்கு வருகின்றன.

இதனாலேயே இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,350 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ ப்ரோக்கோலியின் மொத்த விலை 4100 ரூபாவாகும்.

வயல்களில் பயிர்கள் அழிந்து வருவதால் பசுமைக்குடில்களில் விளையும் காய்கறிகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!