பிடிவாதம் பிடித்த ஜனாதிபதி! பணிந்த இந்தியா

இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற மாலத்தீவின் புதிய ஜனாதிபதியான முகமது முய்சுவின் பிடிவாதம் இறுதியில் வெற்றி பெற்றுள்ளது.

மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது முய்சு பதவியேற்ற பின்பு, இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். அவர் பதவியேற்ற உடன் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதனால், இந்தியா-மாலத்தீவு இடையே மோதல் போக்கு நிலவியது. இறுதியில் இரு நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 80 ராணுவத்தினரை இந்தியா திரும்ப பெற ஒப்புக் கொண்டுள்ளது.

அதன்படி, மார்ச் 10ம் தேதி முதற்கட்டமாக சில ராணுவ வீரர்களும், அதன்பின் மே 10ம் தேதி எஞ்சிய ராணுவ வீரர்களும் வெளியேறுவார்கள் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்தியா, சீனா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மாலத்தீவின் புதிய பிரதமர் முகமது முய்சு இந்தியாவுடன் மோதல் போக்கையும், சீனாவுடன் நட்பையும் வளர்த்துக் கொள்வதாக தகவல் கூறுகின்றனர்.

அதை நிரூபிப்பதுபோன்று ஜனாதிபதி பொறுப்பேற்ற உடன் அவர் சீனாவுக்கு அரசு முறை பயணம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!