டெஸ்ட் கிரிக்கெட்டில் மிரட்டல் சாதனை படைத்த ஸ்டீவன் ஸ்மித்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.

3ஆம் நாளான இன்று நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது. கேன் வில்லியம்சன் 9 ரன்களிலும் வில் யங் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து தங்கள் விக்கெட்டை இழந்தனர்.

இதன்மூலம் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் அதிக கேட்சுகள் (182) பிடித்த 6வது வீரர் என்ற முன்னாள் வீரர் மார்க் வாக்கின் சாதனையை முறியடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள்

ராகுல் டிராவிட் (164 போட்டிகள்) – 210 கேட்சுகள்

மஹேல ஜெயவர்த்தனே (149 போட்டிகள்) – 205 கேட்சுகள்

ஜேக் காலிஸ் (166 போட்டிகள்) – 200 கேட்சுகள்

ரிக்கி பாண்டிங் (168 போட்டிகள்) – 196 கேட்சுகள்

ஜோ ரூட் (139 போட்டிகள்) – 192 கேட்சுகள்

ஸ்டீவன் ஸ்மித் (108 போட்டிகள்) – 182 கேட்சுகள்

மார்க் வாக் (128 போட்டிகள்) – 181 கேட்சுகள்

அலைஸ்டர் குக் (161 போட்டிகள்) – 175 கேட்சுகள்

ஸ்டீபன் ஃபிளெம்மிங் (111 போட்டிகள்) – 171 கேட்சுகள்

கிரேம் ஸ்மித் (117 போட்டிகள்) – 169 கேட்சுகள்

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!