மாநில அளவில் பயங்கரவாதத்தை தமிழகத்தில் புதிய பிரிவு

தமிழ்நாட்டில் மாநில அளவில் பயங்கரவாதத்தை தடுக்க புதிதாக “பயங்கரவாத தடுப்பு பிரிவு” உருவாகவுள்ளது.
இந்த இணைய உலகில், கால ஓட்டத்திற்கேற்ப அரசாங்கமும் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது.
அதன்பொருட்டு சமீபத்தில், பொய் வதந்திகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கையாக “உண்மை சரிபார்க்கும் குழு” ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் தலைமையிலான அரசு, மாநில அளவில் பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில், காவல்துறையில் புதிய பிரிவை உருவாக்கிட அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய பயங்கரவாத தடுப்பு பிரிவானது (ATS) நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபியின் கீழ் செயல்படும்.
இந்த பிரிவில் 1 டி.ஐ.ஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள் மற்றும் 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே சட்டப்பேரவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

1 comment

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமலே 12ஆம் வகுப்பு படித்த மாணவன்! - Namthesam Tamil News November 29, 2023 - 8:55 pm
[…] அருகே வி.மலம்பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கே […]
Add Comment