பெரும் கவலையில் ஸ்டாலின்!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது கவலையை தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் வெளிப்படுத்தினார்.

இந்தியாவில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்துவதில் தீவிரமாக உள்ளது. இந்த தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு ஆய்வுக்குழு ஒன்றையும் ஒன்றிய அரசு நியமித்துள்ளது.

இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உள்ளனர்.

இந்த குழு இறுதியில் தங்கள் அறிக்கையை சமர்பித்த பின் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று(பிப்.14) சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, “மக்களவை தேர்தலுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது.

அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், ஜனத்தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழ்நாடு தனது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்.

மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையாமல் இருக்க நடவடிக்கை தேவை” என்று தனது கவலையை தெரிவித்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!