முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!

இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI Technology) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை ஊடகமொன்று வழங்கியுள்ளது. குறித்த ஒளிபரப்பானது தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், ஒளிபரப்பப்பட்டுள்ளது.

பிரதான அறிவிப்பாளர்களான நிஷாதி பண்டாரநாயக்க மற்றும் சமிந்த குணரத்ன ஆகியோரின் பிரதியே செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய செய்தி ஒளிபரப்பானது இந்த பிரதிகள் மூலம் நீண்ட நேரம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு குறித்த தொலைக்காட்சி வழங்கியுள்ளது.

இந்த செயல்முறையானது, உலகளாவிய ரீதியிலும் நாட்டிலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் கூகுள் சிஇஓ!