உண்மையை மறைத்த இலங்கை இராஜங்க அமைச்சர்?

ராஜங்க அமைச்சர் டயனா கமகே தனது பிரித்தானியா குடியுரிமையை மறைத்து இலங்கை பாஸ்போர்ட் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியா குடியுரிமை விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓசல ஹேரத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் காமி அமரசேகரா, குமுதுனி விக்கிரமசிங்க, ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹபீல் பாரிஸ், “இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு சட்டப்பூர்வ இலங்கை பிரஜாவுரிமை இல்லை. விதிவிட விசாவை பயன்படுத்தி தங்கியுள்ளார். அவர் தனது பிரித்தானியா குடியுரிமையின் உண்மையை மறைத்து இலங்கை பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்” என குறிப்பிட்டார்.

இதற்கு இராஜங்க அமைச்சரின் வழக்கறிஞர், சவேந்திர பெர்னாண்டோ ஆட்சேபனைகள் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!