அமைச்சரை சந்தித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சந்தித்துள்ளார்.

சமீபகாலமாக இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால், இலங்கை அணி பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதுபோன்ற சூழலில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து கலந்துரையாடினர்.

மேலும், கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி கட்டமைப்புகள், புதுமையான பயிற்சி உத்திகள், மனகவனம், திறமை மேம்பாடு,வரும் போட்டிகளில் வெற்றிகளை பெறுவதற்கான உத்திகள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கலந்துரையாடலில், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், டி20 கேப்டன் வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், திமுத் கருணாரத்ன, கிரிக்கட் ஆலோசகர் சனத் ஜெயசூரியா, மற்றும் பிரதம தேர்வாளர் உபுல் தரங்க ஆகியோர் இருந்தனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!